Breaking News
Home / தொழில்நுட்பம் (page 3)

தொழில்நுட்பம்

ஒரு ரீசார்ஜ்.. தினமும் 2.5GB டேட்டா.. OTT.. 365 நாள் வேலிடிட்டி.. ஏர்டெல்லின் ஏராளமான சலுகைகள்..

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த 2024-ம் ஆண்டில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு ஆண்டு வேலிடிட்டி தரும் மூன்று ப்ரீபெய்ட் …

Read More »

வரப்போகும் ஸ்விப்ட் புதிய மாடல்… மார்க்கெட்டே காலியாகப்போகுது..!

புதிய ஸ்விஃப்ட், மார்க்கெட்டை கலக்கும் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுசூகி ஸ்விஃப்ட்டின் புதிய தலைமுறை மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் புதிய ஸ்விஃப்ட் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட், மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை …

Read More »

ரூ.1003 கோடி முதலீடு, 840 பேருக்கு வேலைவாய்ப்பு | தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜன.,23) தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

Read More »

Rolls Royce Spectre EV – இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனம் அறிமுகம்!

சென்னை: இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்பெக்டர் இவி’ (Spectre EV) வாகனம் அறிமுகமாகி உள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். 1906-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. உலக அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். கடந்த 2005 முதல் இந்த நிறுவனத்தின் ஆண்டு வாரியான கார் …

Read More »

இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இருந்து பினாங் நகரத்துக்கு நேரடி விமான சேவை: பினாங் சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: மலேசியா சுற்றுலாத் துறை சார்பில் பினாங் மாநிலத்துக்கு இந்திய சுற்றுலா பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையிலான சுற்றுலா கண்காட்சி ஜன.15 முதல் ஜன.22-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக பினாங் சுற்றுலா கண்காட்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பினாங் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வாங் ஹான் வாய்,பினாங் வர்த்தக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின்குணசேகரன், இயக்குநர் டேட்டின்பாரதி, …

Read More »

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.63 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம்: அமைச்சர் அன்பரசன் பெருமிதம்

சென்னை: குறு, சிறு, தொழில் துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.63 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். 5.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைஅமைச்சர் தா.மோ.அன்பரசன், மத்திய அரசின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட முதல் தரவரிசை பிரிவுக்கான …

Read More »

தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைகளை விரிவுபடுத்த பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முடிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைகளை விரிவுபடுத்த பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பெரம்பலூரில் ரூ.2,500 கோடியில் குரூக்ஸ் காலணி தொழிற்சாலையை பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் தொடங்கி உள்ளது. 2022 நவம்பரில் காலணி ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த நவம்பரில் ஆலையை திறந்து வைத்தார். பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் 2-வது கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய …

Read More »

தென் மாவட்டங்களில் உற்பத்தி திறன் குறைவு; முதலீட்டு இலக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

சென்னை: தென்மாவட்டங்களில் உற்பத்தி திறன் குறைவாக உள்ளதாகவும், முதலீடுகளுக்கான இலக்கை மேலும் அதிகரிக்க உழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் 34 சதவீத உற்பத்தி திறன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து மட்டுமே கிடைக்கின்றன. அதேநேரம் சில மாவட்டங்களில் உற்பத்தி திறன் 1 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. தென் …

Read More »

தமிழகத்தில் இத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வரப்போகுதா? டாப் 10 நிறுவனங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிக அளவு முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதற்காகவும் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், …

Read More »

மகேந்திரா நிறுவனத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் விரைவில் அறிமுகம் – ஆனந்த் மகேந்திரா

சென்னை: ‘சிறந்த முதலீட்டுக்கான இடம் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ஆனந்த் மகேந்திரா பேசியதாவது: தமிழகத்தில் கல்வி மேம்பட்டு இருப்பதால், பணியாளர்களின் தரம் உயர்ந்து இருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தின் ஆராய்ச்சி முனையத்தை சென்னையில் நிறுவுவதில் நான் ஆர்வம் காட்டினேன். தற்போது அது மகேந்திரா நிறுவனத்தின் பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை. ஒரு காலத்தில் மகேந்திரா நிறுவனம், டீசல் வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் என்று மக்கள் …

Read More »