Breaking News
Home / செய்திகள் / நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க இணையதளம்: அமைச்சர் தொடங்கினார்

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க இணையதளம்: அமைச்சர் தொடங்கினார்

சென்னை: தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகின்றன.

இவற்றுக்குத் தேவைப்படும் நூல்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடனும், எவ்விதப் புகார்களுக்கு இடம் அளிக்காமலும் கொள்முதல் செய்யும் வகையில், கடந்த வாரம் பள்ளிக்கல்வித் துறை ஓர் அரசாணை வெளியிட்டது.

அதில், பொது நூலகங்களுக்குத் தேவையான நூல்களை கொள்முதல் செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றன. புத்தகங்களைக் கொள்முதல் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. புத்தகங்களை தேர்வுசெய்யும் குழுவிலும், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொது நூலகங்களுக்குத் தேவையான நூல்களை கொள்முதல் செய்வதற்காக https://bookprocurement.tamilnadupubliclibraries.org/ என்ற பிரத்யேக இணையதளத்தை பொது நூலக இயக்ககம் உருவாக்கியுள்ளது.

இதனை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், பொது நூலக இயக்குநர் கே.இளம்பகவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *