சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிக அளவு முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதற்காகவும் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இப்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் டாப் நிறுவனங்கள் பங்கேற்றன. டாடா, அதானி உள்ளிட்ட இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கூறினார். இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். இதனிடையே, தமிழகத்தில் முதலீடு செய்ய இருக்கும் டாப் 10 நிறுவனங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
முந்தைய முதலீட்டாளர் மாநாடு என்ன ஆச்சு.. எவ்வளவு வேலை கிடைத்தது.. வெள்ளை அறிக்கை கேட்கும் எடப்பாடி
டாடா நிறுவனம்: ரூ.70,800 கோடி
அதானி குழுமம்: ரூ.24,500 கோடி
சிபிசிஎல் நிறுவனம்: ரூ.17,000 கோடி
அதானி குழுமம்: 13,200 கோடி
எல் & டி நிறுவனம்: 3,500 கோடி
ராயல் என்ஃபீல்டு நிறுவனம்: ரூ.3,000 கோடி
மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம்: ரூ.2,740 கோடி
ஹிந்துஜா குழுமம்: ரூ. 2,500 கோடி
ஹலி குளோரி புட்வேர்: ரூ.2,302 கோடி
ஸ்டெல்லண்டில் குழுமம்: ரூ.2,000 கோடி