Breaking News

பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை

பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்: பெண்மையின் பிரதிபலிப்பாக இருக்கும் 28 நாள் மாதவிடாய் சுழற்சி சரியின்மை, முன்பின் வலிகள், உடல் மனரீதியான மாற்றங்கள், அதிக அல்லது குறைவான உதிரப்போக்கு, மாதம் இருமுறை வருதல் அல்லது சில மாதங்கள் தாமதித்து வருதல், உடல் பலகீனம், உடல் பருமன், தைராய்டு ஹார்மோன் குறைபாடுகள், கர்ப்பப்பை சினைப்பை கட்டிகள், வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பு அரிப்புகள், புண்கள், இளம்பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள், …

Read More »

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று (மார்ச் 12) பாஜகவில் இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இணைத்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. இணைப்புக்குப் பின்னர் பேசிய சரத்குமார், ‘பாஜகவில் இணைந்தது சமத்துவ …

Read More »

மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்!

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில்; நம்முடைய செபாக் டிரிப்ளிகேன் தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மே தின …

Read More »

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை அமித்ஷா வெளியிட்டுள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “1955 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவில் 2019 இல் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற வகையில் சில திருத்தங்களை மத்திய பாஜக அரசு செய்தது. இதை …

Read More »

“குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும்” – வைகோ கண்டனம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும் என மதிமுக பொதுச் செயலாளார் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ,நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலும் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிற்போக்கு இந்துத்துவ பாசிச பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றே ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமையாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி தலைமையில் …

Read More »

தொகுதிப் பங்கீடு | சிபிஎம்-க்கு மதுரை, திண்டுக்கல்; சிபிஐ-க்கு நாகை, திருப்பூர் ஒதுக்கீடு

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு இறுதியானது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் – …

Read More »

மீண்டும் எம்.எல்.ஏ., ஆகிறாரா பொன்முடி? சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் தடை செய்ததால், அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ., பதவியை வழங்குவது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.நிருபர்களைச் சந்தித்த அப்பாவு கூறியதாவது: பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்து உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொன்முடி எம்.எல்.ஏ., பதவியில் நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நான்தான் போட்டுள்ளேன்.வயநாடு எம்.பி., …

Read More »

மக்களவை தேர்தலுக்கு வெளிமாநில பார்வையாளர்களாக செல்லும் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவுரை

சென்னை: மக்களவை தேர்தலுக்கு வெளிமாநிலங்களுக்கு பார்வையாளர்களாக செல்ல உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் ஆணையர், அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினார். ஒவவொரு தேர்தலின்போதும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஒரு மாநிலத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் வேறு மாநிலத்தில் தேர்தல் பார்வையாளர்களாக செல்வது வழக்கம். இவர்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுப் பார்வையாளர்களாகவும், ஐபிஎஸ்அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான பார்வையாளர்களாகவும், ஐஆர்எஸ்அதிகாரிகள் செலவினம் தொடர்பானபார்வையாளர்களாகவும் …

Read More »

தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தை அழிக்க சிலர் முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். பேராசிரியர் எம்.எல்.ராஜா எழுதிய பழந்தமிழ் இலக்கியங்களில் பாரத பண்பாடு மற்றும் தமிழ் கல்வெட்டுகளில் பாரத பண்பாடு என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டு பேசியதாவது: நமது கலாச்சாரமும், ஆன்மிகமும் மிக ஆழமானது. இவற்றைபாதுகாக்க தொழில்நுட்பமும் அவசியம். தமிழ் …

Read More »

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க இணையதளம்: அமைச்சர் தொடங்கினார்

சென்னை: தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகின்றன. இவற்றுக்குத் தேவைப்படும் நூல்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடனும், எவ்விதப் புகார்களுக்கு இடம் அளிக்காமலும் கொள்முதல் செய்யும் வகையில், கடந்த வாரம் பள்ளிக்கல்வித் துறை ஓர் அரசாணை வெளியிட்டது. அதில், பொது நூலகங்களுக்குத் தேவையான நூல்களை …

Read More »