சென்னை: ‘சிறந்த முதலீட்டுக்கான இடம் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ஆனந்த் மகேந்திரா பேசியதாவது: தமிழகத்தில் கல்வி மேம்பட்டு இருப்பதால், பணியாளர்களின் தரம் உயர்ந்து இருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தின் ஆராய்ச்சி முனையத்தை சென்னையில் நிறுவுவதில் நான் ஆர்வம் காட்டினேன். தற்போது அது மகேந்திரா நிறுவனத்தின் பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
மகேந்திரா நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை. ஒரு காலத்தில் மகேந்திரா நிறுவனம், டீசல் வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் என்று மக்கள் கருதினர். ஆனால், டீசல் மட்டுமின்றி, காஸ் வகை வாகனங்களுக்கான உயர்தர இன்ஜின்களையும் உருவாக்கி இருக்கிறோம். அதேபோல, எலெக்ட்ரானிக் வாகனங்களையும் உருவாக்குவோம். விரைவில் ஆச்சரியப்பட வைக்கும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.