Breaking News
Home / செய்திகள் / ஒரு ரீசார்ஜ்.. தினமும் 2.5GB டேட்டா.. OTT.. 365 நாள் வேலிடிட்டி.. ஏர்டெல்லின் ஏராளமான சலுகைகள்..

ஒரு ரீசார்ஜ்.. தினமும் 2.5GB டேட்டா.. OTT.. 365 நாள் வேலிடிட்டி.. ஏர்டெல்லின் ஏராளமான சலுகைகள்..

ஒரு ரீசார்ஜ்.. தினமும் 2.5GB டேட்டா.. OTT.. 365 நாள் வேலிடிட்டி.. ஏர்டெல்லின் ஏராளமான சலுகைகள்..

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் இந்த 2024-ம் ஆண்டில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு ஆண்டு வேலிடிட்டி தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3359 Recharge Plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் இதில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 2999 Recharge Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

எனவே ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் எந்தவொரு ஓடிடி நன்மைகளும் வழங்கப்படவில்லை. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மெம்பர்ஷிப், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகள் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1799 Recharge Plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் வெறும் 24ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும். இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump Sum Data) சலுகையாகும். ஆகவே, வேலிடிட்டி நாட்களில் எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 3600எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அழைப்பு நன்மைகளை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *