சென்னை: சேலத்தில், மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் ரூ.6.70 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓசூர் மருத்துவமனையை ரூ.100 கோடியில் தரம் உயர்த்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில், சுகாதாரத்துறை சார்பில் ஓசூர் மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திரூ.100 கோடி மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை …
Read More »தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்தது
சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மழை பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளுக்கு பிறகு கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. …
Read More »கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு… மீண்டும் தொடங்குகிறதா கோவிட்!
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் சில காலம் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், உருமாறிய அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. உலக நாடுகளில்JN.1மற்றும் HV.1 போன்ற கோவிட் திரிபுகள் தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கோவிட் மற்றும் அதன் வேரியன்ட்கள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு …
Read More »கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்… நீங்க எதிர்பார்ப்பதை விட இதில் நிறைய அதிசயங்கள் இருக்கு…!
கிராம்பு தேநீர் ஒரு மகிழ்ச்சியான மூலிகை தேநீர் மட்டுமல்ல, இது நமக்குத் தெரியாத பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டப் பிறகு, இந்த நறுமணம் மற்றும் சுவை நிறைந்த பானம், உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும். கிராம்பு, அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் திடீரென அதிகரிக்கும் சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. …
Read More »தூக்கி அடித்த கொரோனா வைரஸ்.. ஒரே மாதத்தில் பாதிப்பு கிடுகிடுவென உயர்வு!
சென்னை: உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52 சதவிகிதம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்திருப்பதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது. இந்த உலகில் மனிதர்கள் உருவானதிலிருந்தே, தொடர்ந்து உயிர்வாழ ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இருப்பினும், நோய் தொற்றுகள் ஏற்படுத்திய நெருக்கடி கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது. அம்மை நோய் தொடங்கி பிளேக் நோய் வரை வைரஸ் கிருமிகள் மனிதர்களை கொன்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக உருவானதுதான் கொரோனா …
Read More »மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்! செந்தில் பாலாஜிக்கு 3 துறை மருத்துவர்கள் இன்று சிகிச்சை!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் இன்று மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிசோதனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் அவர் திடீரென கடந்த 15 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் தேதி புழல் சிறையில் அமைச்சர் …
Read More »செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்னை? – மருத்துவர்கள் தகவல்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையிலும், அதனபின்னர் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும் அவருக்கு புதன்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இதயம் மற்றும் நெஞ்சகம் சாா்ந்த மருத்துவப் பரிசோதனைகள் …
Read More »நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது விநியோக குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்: சுகாதாரத் துறை
சென்னை: நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள பொது விநியோககுடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்புஅதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ் கொசுக்களின்உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், …
Read More »மருத்துவமனை உணவகங்களில் சுகாதாரமாக, நியாயமான விலையில் விற்பனை: உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்
சென்னை: மருத்துவமனைகளின் உணவகங்களில், உணவுகளை சுகாதாரமாக நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா, வடையை எலி சாப்பிடும் வீடியோவைரல் ஆனது. இதையடுத்து மருத்துவமனை டீன் பாலாஜி,உடனடியாக அந்த உணவகத்தை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல், ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உட்பட மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் …
Read More »காவலர் குடும்பங்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை சிறப்பு முகாம்: டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னை: காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான நீரிழிவு நோய் பரிசோதனை சிறப்பு முகாமை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். ‘நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ், ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீரிழிவு நோய் பரிசோதனை (வெல்னஸ் ஆன் தி வீல்ஸ்) சிறப்பு முகாம் டிஜிபி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. நடமாடும் முகாம் வாகனத்தை டிஜிபி சங்கர் ஜிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக காவல் துறை …
Read More »