சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் சில காலம் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், உருமாறிய அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.
உலக நாடுகளில்JN.1மற்றும் HV.1 போன்ற கோவிட் திரிபுகள் தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கோவிட் மற்றும் அதன் வேரியன்ட்கள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெயர் குறிப்பிடப்படாத நபர், கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி இவர் ஜனவரி 4 அன்று உயிரிழந்துள்ளார்.
கொரோனாவினால் சென்னையில் ஒருவர் உயிரிழந்திருப்பது, மீண்டும் கோவிட் பாதிப்பு அதிகரிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பாக இருங்கள்!