சென்னை: ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு தோராயமாக ரூ.2,809 கோடி (49,847 மில்லியன் ஜப்பானிய யென்) கடனாக அனுமதித்துள்ளது. ஜப்பான் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘சென்னை-பெங்களூரு தொழில்துறை காரிடார்(2015) விரிவான ஒருங்கிணைந்த மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கப்படும் ஒன்றாகும். நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் இதற்காக நடந்து வருகின்றன. …
Read More »சர்ச்சையான கூவத்தூர் விவகாரம்.. நடிகைகளை இழுத்து பேசிய ஏவி ராஜுக்கு பரபர நோட்டீஸ்! யார் அனுப்பியது?
சென்னை: கூவத்தூரில் தங்கிய அதிமுக எம்எல்ஏக்களையும், நடிகைகளையும் தொடர்புப்படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு புதிய சிக்கலில் சிக்கி உள்ளார். 24 மணிநேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏவி ராஜூ. இவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து …
Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஷூ, சாக்ஸ்… பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்ட சென்னை மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி 2024-25ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 2024 – 25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், கல்வித்துறையில் மட்டும் 27 அறிவிப்புகள் அறிவித்தார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி 208 தொடக்க பள்ளிகள் மற்றும் 130 நடுநிலை பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 64,022 மாணவர்களுக்கு ஷூ மற்றும் …
Read More »கிளாம்பாக்கத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணமா? 50 நாட்களில் ரூ.38 லட்சம் வருவாய் – சிஎம்டிஏ விளக்கம்
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. சென்னை அருகே புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் வெளி மாவட்ட பேருந்துகளுக்கான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது குறித்து தற்போது …
Read More »நில உரிமைக்காக போராடும் மேல்மா விவசாயிகளுடன் முதல்வர் பேச வேண்டும்: ராமதாஸ்
சென்னை: நில உரிமைக்காக போராடுபவர்கள் மீது அரசே அவதூறு பரப்புவதுடன், அவமானப்படுத்துவதா? என்றும் மேல்மா விவசாயிகளுடன் முதல்வர் பேச வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்து, மண்ணுரிமைக்காக போராடி வரும் தங்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினை …
Read More »சமவேலைக்கு சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக – அன்புமணி
சென்னை: தமிழகத்தில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் உடனே ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே …
Read More »தமிழை பயன்பாட்டு மொழியாக்க உறுதியேற்போம்: உலக தாய் மொழி தினம் – டிடிவி வாழ்த்து
சென்னை: நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் இன்று (பிப்.21) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மொழிகள் பல இருப்பினும் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கி ஒருவரின் அறிவாற்றலை பெருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் உலக தாய் மொழிகள் தினம் …
Read More »மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா.. அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட மேயர் பிரியா
சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா. 2024 – 25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை …
Read More »கோயம்பேடு – ஆவடிக்கு சர்ரென பறக்கலாமே! மெட்ரோ ரயில் பணிகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட CMRL நிர்வாகம்!
சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டரை கோரியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையின் பெருக்கத்தால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் சில கிலோ மீட்டர் தூரங்களை கூட கடக்க மணிக்கணக்கில் ஆகும் நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருந்தாலும் வாகன புகையால் காற்று …
Read More »செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க கோர்ட் உத்தரவு
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக …
Read More »