சென்னை: ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு தோராயமாக ரூ.2,809 கோடி (49,847 மில்லியன் ஜப்பானிய யென்) கடனாக அனுமதித்துள்ளது.
ஜப்பான் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘சென்னை-பெங்களூரு தொழில்துறை காரிடார்(2015) விரிவான ஒருங்கிணைந்த மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கப்படும் ஒன்றாகும்.
நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் இதற்காக நடந்து வருகின்றன. ஐந்து கட்ட 133 கிமீ சாலை, சென்னை பெருநகரப் பகுதியில் அதிகரித்து வரும் சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைத்து, போக்குவரத்தை சரி செய்ய உதவும்.
உள்வட்டச் சாலை, சென்னை பைபாஸ் சாலை மற்றும் வெளிவட்டச் சாலையை இணைத்து ரேடியல்-ரிங் சாலை வலையமைப்பை உருவாக்கி, வாகனங்களுக்கு மாற்றுப் பாதையை வழங்குவதன் மூலம் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இணைப்புகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை பெருநகரப் பகுதியின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்துறைக் குழுக்களில் இருந்து காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு நேரடி சாலையை வழங்கும் வகையில் இது உருவாக்க உள்ளது . JICA மற்றும் தமிழக அரசின் கூடுதல் செயலாளர் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்த திட்டம் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரத்தை சுமார் 40 நிமிடங்கள் குறைக்கும் (கட்டம் 1 & 2 திட்டத்தின் மூலம்). இது 26.3 கிமீ பெரிஃபெரல் ரிங் ரோடு மூலம் மாநிலத்தின் தெற்கு பகுதிக்கான இணைப்பை மேம்படுத்தும். JICA இந்த திட்டத்தின் முதல் கட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் மார்ச் 2018 இல் கையெழுத்திட்டது மற்றும் பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டத்தின் வடக்குப் பகுதியான பிரிவு 1 (மொத்தம் 24.5 கிமீ) கட்டுமானத்திற்கு ஆதரவளித்தது.
இந்த சாலை திட்டத்தால் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகம் இடையே போக்குவரத்து நேரம் சுமார் 40 நிமிடங்கள் குறையும். இது 26.3 கிமீ புறவட்டச் சாலை மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
சாலை திட்டங்கள்: தமிழ்நாட்டில் இந்த வருடம் மேற்கொள்ளப்படும் பல ரிங் ரோடு திட்டங்கள் மாநிலத்தின் போக்குவரத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பல்வேறு ரிங் ரோடு திட்டங்கள்: அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு ரிங் ரோடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சாலைத் திட்டங்கள் பின்வருமாறு,
🔹சிவகாசிக்கு வெளிவட்ட சாலை
🔹 மன்னார்குடிக்கு ரிங் ரோடு
🔹திண்டுக்கல்லுக்கு பைபாஸ்
🔹திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் இடையே உயர்மட்ட பாலம்
🔹அவினாசி மேட்டுப்பாளையம் ரோடு நான்கு வழிச்சாலை
🔹விழுப்புரத்தில் கோரையாற்றின் குறுக்கே பாலம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.