சென்னை: மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற அரசுகளின் நடவடிக்கை தேவை என்றும் விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்.
Read More »மின்வாரிய அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: மின்வாரிய அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். பொக்லைன் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் போன் எண்களை பெற்று வைத்திருக்க வேண்டும். மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
Read More »சென்னை குன்றத்தூரில் பள்ளி மாணவர்களை தாக்கிய புகாரில் பாஜக பிரமுகரும், துணை நடிகையுமான ரஞ்சனா கைது
சென்னை: சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்களை தாக்கி இறக்கி விட்ட பாஜக பிரமுகர் சினிமா துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு பேருந்து தடுத்து நிறுத்தியது , மாணவர்களை தாக்கியது ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூரில் இருந்து …
Read More »கோவில் காசை 1 ரூபாய் தொடமாட்டோம்! குடும்பத்துக்காக அப்பா எதுவும் செய்யல! பங்காரு அடிகளார் மகன் பளிச்
சென்னை: கோவில் காசையோ, பக்தர்கள் காணிக்கையையோ ஒரு ரூபாய் கூட தொட்டதில்லை என மறைந்த பங்காரு அடிகளாரின் இளைய மகன் கோ.ப.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளார் இளைய மகன்: மருத்துவம், கல்வி ஆகிய இரண்டுக்கும் தனது தந்தை பங்காரு அடிகளார் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாகவும் அதன் படி தாங்களும் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் எனவும் கூறியுள்ளார். பங்காரு அடிகளார் மறைவுக்கு பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் …
Read More »திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை..!!
சென்னை: திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிராமி மெகா மால் கட்டுமான பணிகளை அப்பாசாமி நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் அபிராமி ராமநாதனிடம் விசாரணை நடைபெறுகிறது. சென்னையில் அபிராமி தியேட்டர் உரிமையாளர் ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மந்தைவெளியில் உள்ள அபிராமி ராமநாதனின் மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Read More »“நலவாழ்வு நடைப்பயிற்சி திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்க” – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஜப்பானில் இருப்பதைப் போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ‘ஹெல்த் வாக்’ சாலைகள் அமைக்கும் திட்டத்தைச் சென்னை பெசன்ட் நகரில் இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஜப்பானில், மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த 8 கி.மீ-க்கு ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் தினமும் 10,000 அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், …
Read More »ஐ.டி ரெய்டு பரபரக்கும் சூழலில் போலீஸுக்கு போன காசா கிராண்ட்.. ரகசிய தகவல்களை திருடி விற்றதாக புகார்!
சென்னை: சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள காசா கிராண்ட் நிறுவனத்தில் ஆவணங்களை திருடியதாக ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு நடந்து வரும் சூழலில், போலீசில் திருட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய …
Read More »கருணை அடிப்படையில் வேலை வழங்கும் உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களை கூறி நீர்த்துப்போக செய்யக் கூடாது: ஐகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை : கருணை அடிப்படையில் வேலை வழங்கும் உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களை கூறி நீர்த்துப்போக செய்யக் கூடாது என ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. பொள்ளாச்சியில் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்த மதன் என்பவர் 2013ல் பணியின்போது மாரடைப்பால் காலமானார். கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்க கோரி ஆசிரியர் மதனின் மனைவி விண்ணப்பித்திருந்தார். கணவரின் வேலையை தனது மகள் சனிதாவுக்கு வழங்கக் கோரி கோவை மாவட்ட கல்வி அதிகாரிக்கு …
Read More »Tamil daily mocks free breakfast scheme; CM, Congress hit back
The DMK and Congress in Tamil Nadu have criticized popular Tamil daily Dinamalar for mocking CM MK Stalin’s free breakfast scheme. The article claimed that the scheme has led to overflowing school toilets. CM Stalin condemned the article, while Congress called the newspaper a “BJP mouthpiece”. DMK cadres staged protests …
Read More »பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141வது பிறந்ததினம் இன்று
ஈரோட்டு சிங்கத்திற்கு பிறந்தநாள் ஈடில்லாத் தலைவனேது இவரைப்போல தேடினாலும் காணாது அவரைப்போல இறுதிவரை உழைத்திட்ட இமயமவன் உறுதியாய் இருந்திட்ட உள்ளமவன் சீர்திருத்த கொள்கையின் கோமகன் பார்புகழ வாழ்ந்திட்ட பிதாமகன் சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி சகதிமிகு சமுதாயத்தின் விடிவெள்ளி பெண்ணுரிமைக்கு எழுதினான் முன்னுரை பெண்ணடிமைக்கு எழுதினான் முடிவுரை வையத்தில் வாழ்ந்திட்ட வைக்கம் வீரன் தமிழ்நாட்டின் தன்னலமிலா மகாத்மா விதவைகளின் மறுவாழ்விற்க்கு வழிகாட்டி விந்தைகள்பல புரிந்திட்ட வீரத்தமிழன் மூடநம்பிக்கையை முறித்திட்ட முன்னோடி முன்னேற்ற …
Read More »