சென்னை: மின்வாரிய அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். பொக்லைன் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் போன் எண்களை பெற்று வைத்திருக்க வேண்டும். மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.