சென்னை: சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்களை தாக்கி இறக்கி விட்ட பாஜக பிரமுகர் சினிமா துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு பேருந்து தடுத்து நிறுத்தியது , மாணவர்களை தாக்கியது ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியவாறு சென்றதைக் கண்ட ரஞ்சனா நாச்சியார் பேருந்து நிறுத்த சொல்லி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . இதையடுத்து மாணவர்களை ஆக்ரோஷமாக திட்டி அடித்து பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். இந்த சூழலில் ஓட்டுநர் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் இன்று நடிகை ரஞ்சனாவை கைது செய்துள்ளனர்.