சென்னை: திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபிராமி மெகா மால் கட்டுமான பணிகளை அப்பாசாமி நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் அபிராமி ராமநாதனிடம் விசாரணை நடைபெறுகிறது. சென்னையில் அபிராமி தியேட்டர் உரிமையாளர் ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மந்தைவெளியில் உள்ள அபிராமி ராமநாதனின் மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.