சென்னை : கருணை அடிப்படையில் வேலை வழங்கும் உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களை கூறி நீர்த்துப்போக செய்யக் கூடாது என ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
பொள்ளாச்சியில் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்த மதன் என்பவர் 2013ல் பணியின்போது மாரடைப்பால் காலமானார். கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்க கோரி ஆசிரியர் மதனின் மனைவி விண்ணப்பித்திருந்தார்.
கணவரின் வேலையை தனது மகள் சனிதாவுக்கு வழங்கக் கோரி கோவை மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பித்தார். கோரிக்கையை மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மதனின் மகள் சனிதா வழக்கு தொடர்ந்தார். சனிதா ஏற்கனவே திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி வழங்க கோரிய மனுவை பரிசீலிக்க முடியாது.
மனுதாரரின் தாய் விபத்தில் சிக்கி பணி செய்ய முடியாத நிலையில், மகளுக்கு பணி வழங்க கோரியதில் தவறு இல்லை என நீதிபதி தெரிவித்தார். கருணை அடிப்படையில் வேலை என்ற உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களை கூறி நீர்த்துப்போக செய்யக்கூடாது எனவும் ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.