Breaking News
Home / விளம்பரம் (page 2)

விளம்பரம்

“நீங்கள் சொன்னால் இம்முறை விமானத்தின் மீது நடனம் ஆடுவேன்” – ஷாருக்கான், மணிரத்னம் கலகலப்பான உரையாடல்

அண்மையில் நடந்த விழா ஒன்றில் நடிகர்ஷாருக்கான்மற்றும் இயக்குநர் மணிரத்னம் இடையேயான உரையாடல் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம், ‘நீங்கள் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து 20, 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து படம் நடிப்பீர்களா” என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகர் ஷாருக் கான், ‘இப்போது எல்லாம் வெளியில் …

Read More »

தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைகளை விரிவுபடுத்த பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முடிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைகளை விரிவுபடுத்த பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பெரம்பலூரில் ரூ.2,500 கோடியில் குரூக்ஸ் காலணி தொழிற்சாலையை பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் தொடங்கி உள்ளது. 2022 நவம்பரில் காலணி ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த நவம்பரில் ஆலையை திறந்து வைத்தார். பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் 2-வது கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய …

Read More »

தமிழகத்தில் இத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வரப்போகுதா? டாப் 10 நிறுவனங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிக அளவு முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதற்காகவும் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், …

Read More »

மகேந்திரா நிறுவனத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் விரைவில் அறிமுகம் – ஆனந்த் மகேந்திரா

சென்னை: ‘சிறந்த முதலீட்டுக்கான இடம் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ஆனந்த் மகேந்திரா பேசியதாவது: தமிழகத்தில் கல்வி மேம்பட்டு இருப்பதால், பணியாளர்களின் தரம் உயர்ந்து இருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தின் ஆராய்ச்சி முனையத்தை சென்னையில் நிறுவுவதில் நான் ஆர்வம் காட்டினேன். தற்போது அது மகேந்திரா நிறுவனத்தின் பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை. ஒரு காலத்தில் மகேந்திரா நிறுவனம், டீசல் வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் என்று மக்கள் …

Read More »

அயலான், கேப்டன் மில்லருக்கு கடும் சவால்… அசரடிக்கும் குண்டூர் காரம் ட்ரெய்லர்!

சென்னை: தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி வெளியாகிறது. த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனால் அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு குண்டூர் காரம் சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசரடிக்கும் குண்டூர் காரம் ட்ரெய்லர் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் த்ரி விக்ரம் இயக்கியுள்ள திரைப்படம் குண்டூர் …

Read More »

சிவில் நீதிபதி பதவிக்கான முதன்மைத் தேர்வு: 472 வழக்கறிஞர்கள் தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வெழுத மொத்தம்12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது. இவற்றில் 2,544 பேர் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.அவர்களுக்கான முதன்மைத் தேர்வு நவ. 4, 5-ம் தேதிகளில்நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. …

Read More »

டெஸ்லா போட்டியாளர்.. சென்னைக்கு வர இருந்த வின்பாஸ்ட்.. தென் தமிழ்நாட்டிற்கு அனுப்பிய தமிழ்நாடு அரசு!

சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம். டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும். இப்போது இ …

Read More »

பன்னாட்டு புத்தகக் காட்சியில் 38 நாடுகள் பங்கேற்பு

சென்னை: சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து மடலை வாசித்தார். அதில் கூறியுள்ளதாவது: தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதேநேரம் 47-வது புத்தகக் காட்சி பெரும் வெற்றியை பெற எனது வாழ்த்துகள். பபாசிக்கு பாராட்டுகள். இந்தாண்டு பன்னாட்டு புத்தகக்காட்சி சென்னையில் ரூ.6 கோடியில்ஜன. 16, 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் 38 நாடுகள் பங்கேற்க உள்ளன. …

Read More »

சோனியா அகர்வாலின் ‘7/ஜி டார்க் ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகை சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன், கோயில், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, வானம் மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், …

Read More »

தூள் கிளப்பும் சாம்சங்.. 200MP கேமரா.. 45W சார்ஜிங்.. பிரம்மாண்டமான கேலக்ஸி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஜனவரி 17-ம் தேதி கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும் நிகழ்வில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக இந்த வெளியீட்டு நிகழ்வு சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். குறிப்பாக நிகழ்வில் சாம்சங் …

Read More »