சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது ஜனவரி 17-ம் தேதி கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும் நிகழ்வில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக இந்த வெளியீட்டு நிகழ்வு சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். குறிப்பாக நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்24, சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra specifications): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
இந்த போன் 6.78-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் வெளிவரும். மேலும்3120 x 1440 பிக்சல்ஸ், 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி/1டிபி மெமரி கொண்டு அறிமுகமாகும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் OIS ஆதரவு கொண்ட 200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் (periscope zoom லென்ஸ்) என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் க்களை எடுக்க முடியும்.
குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று
கூறப்படுகிறது.
மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன் ஆனது IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. அதேபோல் இந்த கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.