நடிகை சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன், கோயில், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, வானம் மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் கொடுத்தது. 7ஜி ரெயின்போ காலனியில் அவரின் நடிப்பு இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
நடிகை சோனியா அகர்வால் , இயக்குநர் செல்வராகவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு விவகாரத்தில் முடிந்தது. தற்போது சில படங்களிலும், சின்னத்திரையிலும் சோனியா அகர்வால் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஹருண் இயக்கத்தில் 7/ஜி டார்க் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் சோனியா அகர்வால் நடிக்கவுள்ளார். டிரீம் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகும் 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டரை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.