இந்தியா – இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டியில் 218க்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.
இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.
இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் இன்று (மாா்ச் 7) தொடங்குகியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. 57.4 ஓவர்களில் 218 க்கு ஆல் அவுட்டானது.
இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4, ஜடேஜா 1 என விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
இங்கிலாந்து அணியின் சுருக்கமான ஸ்கோர் கார்டு:
ஜாக் க்ராவ்லி- 79,
பென் டக்கெட்- 27,
ஆலி போப்- 11,
ஜோ ரூட்- 26,
ஜானி பெயர்ஸ்டோ- 29,
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) – 0,
பென் ஃபோக்ஸ்- 24,
டாம் ஹார்ட்லி -6,
மார்க் வுட்- 0
ஜேம்ஸ் ஆண்டர்சன்-0,
ஷொயிஃப் பஷீர்- 11*.