சென்னை: டி.டி.வி. தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இபிஎஸ் ராஜினாமா செய்யும் வரை உரிமை காக்கும் யுத்தம் தொடரும். சசிகலா விரும்பினால் நிச்சயம் அவரை சந்திப்பேன். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.