முகப்பு அண்மை செய்திகள் சினிமா கருத்துப் பேழை இணைப்பிதழ்கள் ப்ரீமியம் வெற்றிக் கொடி வர்த்தக உலகம் மேலும் சந்தாக்கள் முகப்பு தமிழகம் செய்திப்பிரிவு Last Updated : 11 Mar, 2024 05:09 AM 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் கோரலாம் என தமிழக அரசு அறிவிப்பு சென்னை: தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகளை தயாரித்து வழங்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக …
Read More »பொது நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் புத்தகங்கள் கொள்முதல்: பள்ளிக்கல்வி துறை செயலர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்டபொது நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நூல்களை கொள்முதல் செய்யுமாறு பள்ளிக்கல்வி துறை செயலர் குமர குருபரன் உத்தரவிட்டுள்ளார். நூல் கொள்முதல் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பொது நூலகங்களுக்கு நூல்கொள்முதல் செய்ய, பிரத்யேகமாக இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். நூல் கொள்முதலுக்காக, அரசின் ஒப்புதல் பெற்று வல்லுநர்கள் அடங்கிய நூல் தேர்வு …
Read More »வறண்ட வீராணம் ஏரி.. சென்னைக்கு தண்ணீர் நிறுத்தம்.. கோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வருமா?
சென்னை: வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த பெருமழையால் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட …
Read More »இலவச பஸ் பயணம் முதல் கள ஆய்வில் முதல்வர் வரை! நீங்கள் நலமா திட்டத்தில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என நீங்கள் நலமா திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் சாதனைகளை பட்டியலாக அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன்! அதன் மற்றுமோர் அடையாளம்தான் நீங்கள் நலமா திட்டம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாள்தோறும் பார்த்து பார்த்து எத்தனையே முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். …
Read More »தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு
சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், பணியிட பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. தொழிற்சாலைகளில் பணியிடப் பாதுகாப்பை ஏற்படுத்தவும், தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் 53-வது தேசிய பாதுகாப்பு தினம் சென்னையில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, ‘பாதுகாப்புத் தலைமையை மையப்படுத்தி சுற்றுச்சூழல் சமூக நிர்வாகத்தில் சிறப்படைவோம்’ என்ற கருப்பொருளைக் …
Read More »வேலைநிறுத்த நோட்டீஸ் விவகாரம்: போக்குவரத்து ஊழியர்களிடம் 6-ம் தேதி பேச்சு
சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் விவகாரம் குறித்து மார்ச் 6-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன. இதுதொடர்பான 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து …
Read More »கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு
சென்னை: கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், கோடைகாலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் காணொலி வாயிலாக நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் கோடைகாலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் …
Read More »மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6,000 வரவு
சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது. அதேநேரம் …
Read More »முன்பதிவின்போதே ரூ.40 செலுத்தினால் மாநகர பேருந்து மூலம் கிளாம்பாக்கம் வந்து செல்லலாம்
சென்னை: விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது கூடுதலாக ரூ.40 செலுத்தினால் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளை மாநகர பேருந்து மூலம் அடையும் வகையிலான திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 திட்டங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40 கூடுதலாகக் …
Read More »புதிய வசதி: ரூ.40 செலுத்தினால் கிளாம்பாக்கத்திலிருந்து எங்கும் செல்லலாம்!
சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் , இன்று (29.02.2024), தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை …
Read More »