Breaking News
Home / சமுதாயம் / இலவச பஸ் பயணம் முதல் கள ஆய்வில் முதல்வர் வரை! நீங்கள் நலமா திட்டத்தில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

இலவச பஸ் பயணம் முதல் கள ஆய்வில் முதல்வர் வரை! நீங்கள் நலமா திட்டத்தில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

CM Stalin list out DMK governent achievement in Neengalum Nalama scheme inauguration

சென்னை: உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என நீங்கள் நலமா திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் சாதனைகளை பட்டியலாக அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன்! அதன் மற்றுமோர் அடையாளம்தான் நீங்கள் நலமா திட்டம்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாள்தோறும் பார்த்து பார்த்து எத்தனையே முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நீங்கள் நலமா என்ற புதிய திட்டம்!

புதிய திட்டத்தின் இந்த தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை அன்பான அக்கறையைக் காட்டும் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான். இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த நீங்கள் நலமா என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன். இதற்கு முன்பு தொடங்கி வைத்து மக்களின் வாழ்வை மேம்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களைப் பட்டியலிட வேண்டுமென்றால்,

மகளிர் விடியல் பயணம் புதுமைப் பெண் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இல்லம் தேடி கல்வி மக்களைத் தேடி மருத்துவம் ஒலிம்பிக் தேடல் நான் முதல்வன் உங்கள் தொகுதியில் முதல்வர் முதல்வரின் முகவரி கள ஆய்வில் முதலமைச்சர்

என இப்படி நான் அடுக்கிக் கொண்டே இருக்க முடியும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து வரும் திட்டங்கள். இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் அது ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்களாகும். நமது திராவிட மாடல் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் பலன் அடையாதவரே இல்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னை சந்திக்கும் மக்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சியில் இத்திட்டங்களின் வெற்றியைக் காண்கிறேன்.

பயன்பெற்ற மக்களின் புள்ளிவிவரம் எனப் பார்த்தால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபய் உரிமைத் தொகையை பெறுகிறார்கள். விடியல் பயணத் திட்டம் மூலம் மகளிர் 445 கோடி முறை பயணித்து மாதம் ரூ 888 வரை சேமித்துப் பயனடைகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ஒரு கோடிப் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் மாணவர்கள் வயிறார காலைச் சிற்றுண்டி உண்கிறார்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான புதுமைப் பெண் திட்டத்தின் பயனாக 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று பட்டதாரிகளாக உருவாக போகிறார்கள். நான் முதல்வன் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்தி பயனடைந்துள்ளனர். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள். 62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன. 2 லட்சம் உழவர்கள் புதிதாக இலவச மின் இணைப்பு பெற்றுள்ளார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் 30 லட்சம் முதியோரும் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் மாதந்தோறும் பயனடைகிறார்கள். நம்மை காக்கும் 48 திட்டத்தால் 2 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி திட்டத்தினால் 19.69 லட்சம் பேர் பயனடையும் வகையில் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *