சென்னை: மருத்துவமனைகளின் உணவகங்களில், உணவுகளை சுகாதாரமாக நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா, வடையை எலி சாப்பிடும் வீடியோவைரல் ஆனது. இதையடுத்து மருத்துவமனை டீன் பாலாஜி,உடனடியாக அந்த உணவகத்தை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல், ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உட்பட மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் …
Read More »சென்னையில் காற்று மாசுபாடு மேலும் அதிகரிப்பு – பல இடங்களில் 100ஐ தாண்டியது காற்றின் தரக்குறியீடு
சென்னை: தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்தது. பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது. தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகை தினமான இன்று, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் …
Read More »வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை : தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள கஜலட்சுமி காலனி கல்யாண மண்டபத்தில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ …
Read More »கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிப்பது அவசியம்: கண் மருத்துவர் மோகன் ராஜன் அறிவுறுத்தல்
சென்னை: கண்களைப் பாதுகாக்க, கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண் மருத்துவர் மோகன் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடித்து மகிழ்வது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். பட்டாசுகளை மிகவும் பாதுகாப்புடன் வெடித்து, தீபாவளியைக் கொண்டாட வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, அதன் துகள்கள் …
Read More »பொது பயன்பாட்டு இடங்களை வகை மாற்றம் செய்ய கூடாது: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை
சென்னை: பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்ட பொது பயன்பாட்டு இடத்தை வகை மாற்றம் செய்வது மற்றும் விலக்கு கோருவதற்கான முன்மொழிவுகளை அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பூங்கா உள்ளிட்ட பொது இடங்கள் பசுமையான சுற்றுச்சூழல் அழகு மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்டது மட்டுமின்றி, அப்பகுதியில் …
Read More »சென்னையின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் 18,000 போலீஸார்: தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஆய்வு
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னைமாநகரின் முக்கிய இடங்களில் 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்நேற்று நேரில் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புத்தாடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நெரிசலைப் பயன்படுத்தி யாரேனும் சமூக விரோதிகள் …
Read More »பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
சென்னை: தீபாவளியின்போது நேரிடும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதைக்கருத்தில் கொண்டு …
Read More »சனாதனத்தின் பாதுகாவலர் என்று சொல்லக்கூடியவர் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்த கூடாது: உயர் நீதிமன்றம்
சென்னை: சனாதனத்தின் பாதுகாவலர் என்று சொல்லக்கூடிய நபர் விரும்பத்தகாத வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ரூ.2000 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை காணாமல்போன விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என ரங்கராஜன் நரசிம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. …
Read More »