சென்னை : தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை செனாய் நகரில் உள்ள கஜலட்சுமி காலனி கல்யாண மண்டபத்தில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது,
தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு
வருகிறது. இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 10,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் (29.10.2023 – 31.12.2023 ) 10 வாரங்கள் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பருவங்களிலும் மழைக்கால நோய்களான டெங்கு, இன்சுலின்சா டைப்பாயிடு போன்ற பல்வேறு உபாதைகளில் இருந்தும் நோய்களிலிருந்தும் மக்களை காப்பதற்கு முதலமைச்சர் தொடர்ந்து ஏராளமான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்:’சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா… – கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!
மக்கள் நல்வாழ்வுத் துறை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள்
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் 1,000 இடங்களில் மருத்துவம் என்ற பெயரில் அதை விட 1900 மருத்துவ முகங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 20 ஆம் தேதி வரை பருவமழை காலம் உள்ள நிலையில் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முகாமிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
300 நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட தொடர் சிகிச்சையானது அளிக்கப்பட்டு
வருகிறது.
இந்தியா முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஒன்றிய அரசின்
சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே தமிழகஅரசு தொடர்ந்து 10 முகாம்களை நடத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து, 18ஆம் தேதியும் 25ஆம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. மேலும், டிசம்பர் மாதம் 2ஆம் தேதி, 9ஆம் தேதி, 16ஆம் தேதி 23ஆம் தேதி, 30-ஆம் தேதி என்று 5 வாரங்கள் டிசம்பர் மாதத்தில் முகாம்கள் நடைபெற இருக்கின்றன. மேலும் 476 நடமாடும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன உள்ளன.
நகர்ப்புற நல வாழ்வு மையம் என்கிற வகையில் டெல்லியில் உள்ள மருத்துவமனை
நேரடியாக பார்த்து அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு 708 இடங்களில் அமையும் என்று
முதலமைச்சர் அறிவித்தார்.
சென்னையில் 200 வார்டுகளுக்கு 200 மருத்துவமனை என்று திட்டமிட்டு 140
மருத்துவமனைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இன்னும் ஒரு மாதத்தில் 152 மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
செனாய் நகர் ஆலந்தூர் பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ரூ. 18 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை இன்னும் இரண்டு மாதத்தில் நிறைவு பெற இருக்கிறது. 7 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், 2 சமுதாய நல நிலையங்கள் இன்னும் இரண்டு மாதத்துக்குள் திறக்கப்பட உள்ளன.
வரும் 15ஆம் தேதி புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 17 ஆரம்ப
மற்றும் துணை சுகாதார நிலையங்களை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.
சிதலமடைந்த மருத்துவ கட்டிடங்கள் மற்றும் வாடகை கட்டிடத்தில் இருக்கக்கூடிய
துணை சுகாதார நிலையங்கள் அனைத்தையும் மாற்றி கட்டிடங்கள் அமைக்கும் பணியானது 15ஆவது நிதி ஆணையத்தின் கீழ் பெறப்பட்ட நிதியில் நடைபெற உள்ளது.
டெங்குவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால் அது பொது மக்களால் மட்டுமே முடியும். டெங்கு கொசு என்பது பொதுமக்களிடமிருந்தே உருவாகிறது. இவர்கள்
பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் தேங்காய் மட்டைகள் தண்ணீர் தேங்கக்கூடிய இடங்கள் போன்ற இடங்களில் இருந்து கொசுக்கள் உருவாகிறது. எனவே, பொதுமக்கள் சூற்றுசூழலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.