பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்: பெண்மையின் பிரதிபலிப்பாக இருக்கும் 28 நாள் மாதவிடாய் சுழற்சி சரியின்மை, முன்பின் வலிகள், உடல் மனரீதியான மாற்றங்கள், அதிக அல்லது குறைவான உதிரப்போக்கு, மாதம் இருமுறை வருதல் அல்லது சில மாதங்கள் தாமதித்து வருதல், உடல் பலகீனம், உடல் பருமன், தைராய்டு ஹார்மோன் குறைபாடுகள், கர்ப்பப்பை சினைப்பை கட்டிகள், வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பு அரிப்புகள், புண்கள், இளம்பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள், …
Read More »மாநகராட்சி சார்பில் மார்ச் 3ம் தேதி சென்னையில் 1,646 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: ஏற்பாடுகள் தீவிரம், ஆணையர் தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ள தீவிர கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், காணொலி காட்சி மூலம் ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ …
Read More »தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம்: வரவேற்பை பெற்றுள்ளதாக பொது சுகாதார துறை தகவல்
சென்னை: தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டுதொடங்கி வைத்தார். இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதால், கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் …
Read More »தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதுவை கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி என்ற உடலுக்கரு கேடு விளைவிக்கும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் என தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை …
Read More »சென்னை | ரசாயனம் கலப்பதாக தகவல்: பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல்
சென்னை: சென்னை, மெரினாவில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1,000 பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சு மிட்டாயில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் (ரோடமென் பி) ரசாயனம் நிறத்துக்காக கலக்கப்படுவதாகவும், இதனால்எளிதில் புற்றுநோய் பரவுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள் மெரினா கடற்கரையில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர், …
Read More »தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் உருமாற்றம் : மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தல்!!
சென்னை : தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓர் ஆண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இல்லை என்று பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். …
Read More »விதிமீறல்களில் ஈடுபட்டதாக 219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் ரத்து
சென்னை: தமிழகத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 9 மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை …
Read More »கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி செலவில் 70 குளிர்பதன தனி அறைகள், 50 படுக்கைகளுடன் ஐசியூ: அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகள் ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் …
Read More »தமிழகத்தில் இணைநோய் பாதிப்புள்ள 1.35 கோடி பேருக்கு கண், கால், சிறுநீரக பரிசோதனை
சென்னை: தமிழகத்தில் இணைநோய் பாதிப்புள்ள 1.35 கோடி பேருக்கு கண், கால், சிறுநீரக பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். தமிழக சுகாதாரத் துறையின் ‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளியில் 2021-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தில், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இல்லங்களுக்கு சென்று மருத்துவசேவைகள் …
Read More »கருப்பு திராட்சையில் உள்ள மருத்துவ குணம்
கருப்பு திராட்சை ஒரு சத்தான பழமாகும், இது பல்வேறு மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. கருப்பு திராட்சையின் சில முக்கிய மருத்துவ நன்மைகள் பின்வருமாறு: கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. இவை இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. கருப்பு திராட்சையில் உள்ள லுடீன் மற்றும் …
Read More »