Breaking News
Home / உடல் நலம் (page 3)

உடல் நலம்

ராணிப்பேட்டை பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசு வெடித்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

Read More »

பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த இருவருக்கு அறுவை சிகிச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று இரவு முதல் இன்று காலை வரை, தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையைத் தவிர்த்து வேறு எங்கும், பட்டாசுகள் வெடித்து காயம் ஏற்பட்ட நிலையில், யாரும் அனுமதிக்கப்படவில்லை”, என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் …

Read More »

பெருங்களத்தூரை விடுங்க.. கலங்கிய தாம்பரம்.. சென்னையில் பரவும் “சால்மோனெல்லா டைஃபி”.. இதுதான் அறிகுறி

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முக்கிய எச்சரிக்கையும், அறிவுறுத்தலையும் பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர். தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. இதனால், மழைக்கால நோய்களாக, காய்ச்சல், சளி பாதிப்புகள் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்கிறார்கள்.. இப்படித்தான், கடந்த செப்டம்பர் மாதமும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிக …

Read More »

வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள கஜலட்சுமி காலனி கல்யாண மண்டபத்தில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ …

Read More »

சித்தா, ஆயுர்வேதம் படித்தவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு

சென்னை: சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ பதி மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை வழங்கலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு செப்.8-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2021 நவ.14-ல் மனுவை …

Read More »

கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிப்பது அவசியம்: கண் மருத்துவர் மோகன் ராஜன் அறிவுறுத்தல்

சென்னை: கண்களைப் பாதுகாக்க, கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண் மருத்துவர் மோகன் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடித்து மகிழ்வது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். பட்டாசுகளை மிகவும் பாதுகாப்புடன் வெடித்து, தீபாவளியைக் கொண்டாட வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, அதன் துகள்கள் …

Read More »

பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு

சென்னை: தீபாவளியின்போது நேரிடும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதைக்கருத்தில் கொண்டு …

Read More »

காலியாக உள்ள முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்ப கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 128முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்க கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், மருத்துவ காலி இடங்களை நிரப்ப காலஅவகாசம் கோரி எழுதிய கடிதத்துக்கு சாதகமான பதிலை அளித்தீர்கள். அதனால், மாநிலத்தில் காலியாக உள்ள விலைமதிப்பற்ற எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், …

Read More »

தீபாவளி | தமிழகம் முழுவதும் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள்

சென்னை: “தீபாவளி தீக்காய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்படுகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை …

Read More »

கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள்: செய்திகளை சுட்டிக்காட்டி முதல்வர் பெருமிதம்

சென்னை: கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நான் முதல்வன், மருத்துவ காப்பீட்டு திட்ட செயல்பாடுகள் இருப்பதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூக ஊடகப்பதிவில் கூறியிருப்பதாவது: கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் வெளியான ஒரு செய்தியில், ‘‘நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் …

Read More »