Breaking News
Home / பொழுதுபோக்கு (page 3)

பொழுதுபோக்கு

இறுதிகட்டத்தை எட்டிய பிக்பாஸ்! மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய பிரபலம்

சென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் ஜன.14 அன்று நடைபெறுகிறது. பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, …

Read More »

ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 142 ரன்கள்இலக்கை 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி கண்டது.இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி 2-வது …

Read More »

ஐபிஎல் தொடருக்குத் தயாராக இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, கோலி தேர்வா?

கடந்த நவம்பர் 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி20 அரையிறுதியில் ஆடிய பிறகு டி20 போட்டிகளில் ஆடாத விராட் கோலியையும் ரோகித் சர்மாவையும் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்ததன் பேரில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. டி20 அணியில் இவர்கள் பணி முடிந்துவிட்டது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், மீண்டும் டி20-யிலும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் அவர்கள் வழியை அடைத்துக் கொண்டிருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஹர்திக் பாண்டியா, …

Read More »

அயலான், கேப்டன் மில்லருக்கு கடும் சவால்… அசரடிக்கும் குண்டூர் காரம் ட்ரெய்லர்!

சென்னை: தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி வெளியாகிறது. த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனால் அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு குண்டூர் காரம் சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசரடிக்கும் குண்டூர் காரம் ட்ரெய்லர் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் த்ரி விக்ரம் இயக்கியுள்ள திரைப்படம் குண்டூர் …

Read More »

சோனியா அகர்வாலின் ‘7/ஜி டார்க் ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகை சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன், கோயில், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, வானம் மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், …

Read More »

இணையத்தில் வைரலாகும் விஜய் இரட்டை வேடங்களில் காட்சியளிக்கும் தளபதி 68 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..!

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் ‘தளபதி 68’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதிலேயே படத்தின் பெயர், “The Greatest Of All Time” என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் …

Read More »

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: 4-வது சுற்றில் குகேஷுக்கு வெற்றி

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 44-வது நகர்த்தலின் போது வெற்றிபெற்றார். இதன் மூலம் முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். இந்த தொடரில் குகேஷுக்குஇது முதல் …

Read More »

யு19 ஆசியக்கோப்பையை முதல்முறையாக வென்று சாதனை படைத்த வங்கதேச அணி! 195 ரன்களில் அபார வெற்றி!

ஆசிய அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை தொடர் டிசம்பர் 8ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்தது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் முதலிய 8 அணிகள் பங்குபெற்று விளையாடின.U19 Asia Cup Winner இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் A பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், B பிரிவில் இருந்து வங்கதேசம் மற்றும் UAE …

Read More »

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் | லெவோன் அரோனியனுடன் குகேஷ் இன்று மோதல்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று (15-ம் தேதி) சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கிராண்ட்மாஸ்டர்களான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், பி.ஹரிகிருஷ்ணா, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஹங்கேரியின் சனான் சுகிரோவ், உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோர் கலந்து …

Read More »

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் | இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜன.20-ல் வங்கதேசத்துடன் மோதல்

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 16 அணிகள் கலந்து கொள்ளும் யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையிட்டதை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்வாரியத்தை ஐசிசி சஸ்பெண்ட் செய்தது. இதைத் தொடர்ந்து யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இந்த தொடருக்கான திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி …

Read More »