யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
16 அணிகள் கலந்து கொள்ளும் யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையிட்டதை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்வாரியத்தை ஐசிசி சஸ்பெண்ட் செய்தது. இதைத் தொடர்ந்து யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இந்த தொடருக்கான திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 19-ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. அன்றைய தினம் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் அயர்லாந்து – அமெரிக்காவுடனும், தென் ஆப்பிரிக்கா – மேற்கு இந்தியத் தீவுகளுடனும் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. இதன் பின்னர் 25-ம் தேதி அயர்லாந்தையும், 28-ம் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.