Breaking News
Home / பொழுதுபோக்கு / இறுதிகட்டத்தை எட்டிய பிக்பாஸ்! மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய பிரபலம்

இறுதிகட்டத்தை எட்டிய பிக்பாஸ்! மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய பிரபலம்

இறுதிகட்டத்தை எட்டிய பிக்பாஸ்! மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய பிரபலம்?

சென்னைபிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் ஜன.14 அன்று நடைபெறுகிறது. பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர். சென்ற வாரம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பூர்ணிமா ரவி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து, வார இறுதி எவிக்‌ஷனில் விசித்ரா வெளியேறினார். இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அதன்படி வினுஷா, அக்‌ஷயா, சரவணவிக்ரம், கூல் சுரேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி, விஜய்வர்மா ஆகியோர் உள்ளனர். இவர்களில் இருந்து மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேறிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading

About Admin

Check Also

ரஞ்சி அரையிறுதி: 17 ரன்னுக்கு 4 விக்கெட் காலி; மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு தடுமாற்றம்!

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *