Breaking News
Home / விளையாட்டு (page 4)

விளையாட்டு

விஜய் ஹசாரே டிராபி; நாகாலாந்தை எளிதாக வீழ்த்தியது தமிழ்நாடு: காலிறுதிக்கு முன்னேற்றம்

 விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், நாகாலாந்து அணியுடன் மோதிய தமிழ்நாடு 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்துவீசியது. வருண் சக்ரவர்த்தி – சாய் கிஷோர் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய நாகாலாந்து 19.4 ஓவரில் வெறும் 69 ரன் மட்டுமே …

Read More »

இந்தியாவுடன் ஒருநாள், டி20 தொடர் தென் ஆப்ரிக்க அணியில் பவுமா, ரபாடாவுக்கு ஓய்வு

 இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மோதவுள்ள தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன் தெம்பா பவுமா, வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற உள்ளன. முதல் டி20 போட்டி …

Read More »

தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் வீராங்கனை வைஷாலியின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வைஷாலியின் வெற்றிப் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கிராண்ட்மாஸ்டர் உடன்பிறப்புகளாக நீங்களும் சகோதரர் பிரக்ஞானந்தாவும் வரலாறு படைத்துள்ளீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read More »

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் நியூஸிலாந்து அணி

 வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 332 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணியானது 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியிருந்தது. சில்ஹெட் நகரில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 310 ரன்களும், நியூஸிலாந்து அணி 317 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வதுஇன்னிங்ஸை விளையாடிய வங்கதேச …

Read More »

சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும்! – நீரஜ் சோப்ரா

சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஒலிம்பிக் 2024’ தொடர் நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் …

Read More »

“டி20 உலகக்கோப்பை வெல்ல டிராவிட் இருக்க வேண்டும்” – பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து கம்பீர்!

சமீபத்தில் முடிவடைந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின், ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து ராகுல் டிராவிட் நீடிப்பாரா இல்லை விவிஎஸ் லக்சுமன் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட்டின் தலைசிறந்த பங்களிப்பையும், இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் பாராட்டியிருக்கும் பிசிசிஐ, தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.rahul dravid ராகுல் …

Read More »

6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இந்திய அணி வீரர்கள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பின் இறுதி ஆட்டம் 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, …

Read More »

ODI WC Final | ‘ஆஸ்திரேலியாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது’: மைக்கேல் பெவன்

சென்னை: முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் எனும் அணி புதிதாக அறிமுகமாகிறது. இந்த அணியுடன் மொத்தம் 6 அணிகள் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. இந்நிலையில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் அணியின் சீருடை அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த அணியின் பயிற்சியாளரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் …

Read More »

இறுதிப் போட்டிக்காக பிரம்மாண்டமாக தயாராகும் நரேந்திர மோடி மைதானம்: விமான சாகசங்கள், இசை நிகழ்ச்சி, லேசர் ஷோ

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் …

Read More »

ODI WC Final | IND vs AUS – பகை தீர்க்கும் படலம்: 20 ஆண்டுகால கணக்கை ஈடு செய்யுமா இந்தியா?

சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. உலகக் கோப்பை இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடுவது இது 2-வது முறை. இதற்கு முன்னர் கடந்த 2003 உலகக் கோப்பை இறுதியில் ஆஸி. வசம் இந்தியா தோல்வியை தழுவியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு தொடரின் இறுதிப் …

Read More »