இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மோதவுள்ள தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன் தெம்பா பவுமா, வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற உள்ளன. முதல் டி20 போட்டி டிச.10ம் தேதி டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடக்கிறது. இந்த நிலையில், 3 தொடர்களுக்குமான தென் ஆப்ரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களுக்கான அணியில், உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட்டா தெம்பா பவுமா, வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்களுக்கான கேப்டனாக அதிரடி வீரர் எய்டன் மார்க்ரம் செயல்பட உள்ளார். டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக பவுமா நீடிக்கிறார். ரபாடாவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 23 வயது ஆல் ரவுண்டர்/விக்கெட் கீப்பர் டிரைஸ்டன் ஸ்டப்ஸ் டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். யான்சென், கோட்ஸீ, என்ஜிடி ஆகியோர் முதல் 2 டி20 போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளனர். அதன் பிறகு டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், உள்ளூர் போட்டிகளில் பயிற்சி பெறுவார்கள்.
தென் ஆப்ரிக்கா (டி20): எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மேத்யூ பிரீட்ஸ்கே, டிரைஸ்டன் ஸ்டப்ஸ் (கீப்பர்), ஹெய்ன்ரிச் கிளாஸன் (கீப்பர்), டேவிட் மில்லர், டொனோவன் பெரேரா, நாண்ட்ரே பர்கர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஸீ, அண்டிலே பெலுக்வாயோ, கேஷவ் மகராஜ், டாப்ரைஸ் ஷம்சி, லிஸாட் வில்லியம்ஸ், ஓட்நீல் பார்ட்மேன், லுங்கி என்ஜிடி.
தென் ஆப்ரிக்கா (ஒருநாள்): எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வாண்டெர் டுஸன், கைல் வெரைன் (கீப்பர்), ஹெய்ன்ரிச் கிளாஸன் (கீப்பர்), டேவிட் மில்லர், நாண்ட்ரே பர்கர், வியான் முல்டர், மிலாலி போங்வானா, அண்டிலே பெலுக்வாயோ, கேஷவ் மகராஜ், டாப்ரைஸ் ஷம்சி, லிஸாட் வில்லியம்ஸ், ஓட்நீல் பார்ட்மேன்.
தென் ஆப்ரிக்கா (டெஸ்ட்): தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, கீகன் பீட்டர்சன், கைல் வெரைன் (கீப்பர்), டிரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்காம், வியான் முல்டர், மார்கோ யான்சென், நாண்ட்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸீ, காகிசோ ரபாடா, லுங்கி என்ஜிடி, கேஷவ் மகராஜ்.