சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் பட்டியலை மார்ச் 15-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின்கீழ் வரும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் 50 சதவீத பணியிடங்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வு …
Read More »பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை – பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு
சென்னை/ கல்பாக்கம்: தமிழகத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்து சென்றார். 3-வது முறையாக இரண்டு நாள் பயணமாக கடந்த 27-ம் தேதி தமிழகம் வந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ …
Read More »8,130 பேரூராட்சி பணியிடங்களை ரத்து செய்து தமிழக அரசு ஆணை: திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்களை ரத்து செய்யும் ஆணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்குப் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8,130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7,061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், …
Read More »தமிழை வழக்காடு மொழியாக்க கோரி வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தில் முதல்வர் பங்கேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் எதிரில் 4 நாட்களுக்கும் மேலாக சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். …
Read More »வேலைநிறுத்த நோட்டீஸ் விவகாரம்: போக்குவரத்து ஊழியர்களிடம் 6-ம் தேதி பேச்சு
சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் விவகாரம் குறித்து மார்ச் 6-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன. இதுதொடர்பான 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து …
Read More »சென்னைக்கு திரும்புது பிரபல போர்ட் நிறுவனம்.. தயாரிக்கப்படும் கார் மாடல் இதுதான்.. அசத்தல் தகவல்!
சென்னை: சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே உள்ள போர்ட் தொழிற்சாலை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் போர்ட் மஸ்டாங் இவி கார் தயாரிக்கப்பட உள்ளது. போர்டு நிறுவனம் இந்தியாவில் Mustang Mach-E வாகனத்தின் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் போர்ட் மீண்டும் நுழைவதை உறுதி செய்துள்ளது. இந்த காரைத்தான் தமிழ்நாட்டில் முதல் …
Read More »சென்னையில் மார்ச் 4ல் பாஜக மாநில மையக்குழு கூட்டம்
சென்னை : நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில மையக் குழு நாளை மறுநாள் (மார்ச் 4) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி வியூகம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், …
Read More »முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாருக்கு உண்மையான விடுதலை வழங்குக: இபிஎஸ்
சென்னை: திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் …
Read More »“பாஜக – தமாகா முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது” – ஜி.கே.வாசன் பேட்டி
சென்னை: ‘பாஜக – தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது.’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமாகா இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் போன்றோர் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு …
Read More »ரஞ்சி அரையிறுதி: 17 ரன்னுக்கு 4 விக்கெட் காலி; மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு தடுமாற்றம்!
2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்கு காலிறுதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா மற்றும் …
Read More »