சென்னை: சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கே உள்ள போர்ட் தொழிற்சாலை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் போர்ட் மஸ்டாங் இவி கார் தயாரிக்கப்பட உள்ளது.
போர்டு நிறுவனம் இந்தியாவில் Mustang Mach-E வாகனத்தின் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் போர்ட் மீண்டும் நுழைவதை உறுதி செய்துள்ளது. இந்த காரைத்தான் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக உற்பத்தி செய்ய உள்ளனர். அடுத்த தலைமுறை எண்டெவர் கார்கள் இதன் மூலம் போர்ட் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
Ford நிறுவனம் முதலீடுகள்; அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
தொழிற்சாலை மூடல்: தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் . என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, டாடாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.. ஆனால் இந்த சந்திப்பு பெரிதாக பலன் அளிக்கவில்லை.
இதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த தொழிற்சாலையை வாங்குவதற்கான கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடைபெற்றன. ஆனால் கடைசியில் டாட்டா நிறுவனம் குஜராத்தில் இருக்கும் போர்ட் நிறுவனத்தை வாங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் உள்ள போர்ட் ஆலை யாராலும் வாங்கப்படாமல் முடங்கியது. இதையடுத்து இந்த இடத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்யவும் ஆலோசனை செய்யப்பட்டது.
பிஒய்டி நிறுவனம் : அதே சமயம் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமும் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியது. சென்னை மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலையை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு தொழிற்துறை சில பெரிய நிறுவனங்களுடன் பேசி வருகிறதாம். சில “பிக் நேம்” அதாவது பெரிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்த தொழிற்சாலையை வாங்க உள்ளதாக கூறப்பட்டது.
பிஒய்டி சீனாவில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது போர்ட் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.
எந்த நிறுவனம்: இந்த நிலையில்தான் இதில் JSW-MG குழு இந்த தொழிற்சாலையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தன. இந்தியாவில் அவர்கள் விற்பனையை விரிவுபடுத்த உள்ள நிலையில், போர்ட் தொழிற்சாலையை வாங்க ஆலோசனை செய்து வந்ததாம் . அப்படி அந்த நிறுவனம் வரும் பட்சத்தில் அது தமிழ்நாட்டிற்கும், சென்னைக்கும் மிகப்பெரிய குட் நியூஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது;.
இப்படிப்பட்ட நிலையில்தான் போர்ட் நிறுவனம் அந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி உள்ளதாம். தொழிற்சாலையை விற்க வேண்டாம் என்ற திட்டத்திற்கு போர்ட் நிறுவனம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மீண்டும் இந்திய உற்பத்தி மார்கெட்டிற்கு போர்ட் நிறுவனம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் இங்கே உற்பத்தியை தொடங்க வாய்ப்பு உள்ளதாக போர்ட் நிறுவன வட்டாரங்கள் தகவல்கள் வருகின்றன. பெரும்பாலும் Mustang Mach-E வாகனத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.