சென்னை : நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில மையக் குழு நாளை மறுநாள் (மார்ச் 4) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டணி வியூகம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.