Breaking News
Home / செய்திகள் (page 127)

செய்திகள்

மதுபோதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து ரகளை!

சென்னை : சென்னை அரசு பேருந்தின் கண்ணாடிகளை மதுபோதையில் இருந்த நபர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் – குன்றத்தூர் சாலையில் கடந்த 2ஆம் தேதி சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமாக வந்த மாணவர்களை நடிகை ரஞ்சனா, பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கிவிட்டு அவர்களைத் தாக்கினார். மேலும், படிக்கட்டில் பயணித்த மாணவர்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி பேருந்தின் நடத்துநரைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த …

Read More »

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

சென்னை : இன்று மாலை 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் அந்த மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததாக தகவல் வெளியானது அதேபோல் இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை …

Read More »

ஐ.டி ரெய்டுக்கு பின்னணி இதுதானாமே? காசா கிராண்ட் வெளியிட்ட ‘அந்த’ அறிவிப்பு.. மூக்கு வேர்த்திடுச்சோ!

சென்னை: பிரபல ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் நிறுவனம் மீது வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுவதற்கு, அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பும், அடுத்தடுத்த புராஜெக்ட்கள் பற்றிய தகவல்களும் கசிந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது. காசா கிராண்ட் நிறுவனம்: சுமார் 20 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் இயங்கி வரும் காசா கிராண்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் தங்களது …

Read More »

போக்குவரத்து துறையை தட்டிக் கேட்ட தமிழகத்து ஜான்சி ராணி.. ரஞ்சனாவுக்கு பாஜக மூத்த நிர்வாகி புகழாரம்

சென்னை: போக்குவரத்துத் துறையை தட்டிக் கேட்ட தமிழகத்தின் ஜான்சி ராணி ரஞ்சனா நாச்சியாருக்கு பாராட்டுகளை பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியிருப்பதாவது: தலைவிரித்தாடும் தரமற்ற ஒழுங்கற்ற பொறுப்பற்ற போக்குவரத்து துறையை தட்டி கேட்ட தமிழகத்தின் ஜான்சி ராணி @RanjanaNachiyar நாச்சியார் அவர்களுக்கு எம் பாராட்டுக்கள் வக்கற்ற வகையற்ற திக்கற்ற தெம்பற்ற திறனற்ற தைரியமற்ற #திமுக அரசு இந்த வீரப் பெண்மணியை …

Read More »

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் வைரல் காய்ச்சல்.. ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றும், இன்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் அவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்த நிலையில் இன்று வைரல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டாக்டர் அவருக்கு முக்கிய அட்வைஸை கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் …

Read More »

Indian 2 Intro: “இந்தியன் படத்தோட வேல்யூ தெரியுமா..?” அனிருத்தை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2, இரு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்தியன் 3ம் பாகத்துக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் அனிருத்தின் பிஜிஎம் மிக மோசம் என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அனிருத்துக்கு இந்தியன் படத்தோட வேல்யூ தெரியுமா? உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் …

Read More »

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.15ல் காங். கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.15ல் காங். கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி பங்களிப்பு தொகை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த மண்.. டிடிஎப் வாசனுக்கு இவ்வளவு பில்டப்பா? சொன்னது யாருனு பாருங்க

சென்னை: விதிகளை மீறி வாகனத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் கடந்த 1ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் அவர் கடைசியாக விபத்தில் சிக்கியது குறித்து, ‘மஞ்சள் வீரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ‘செல்அம்’ பேசியிருப்பது விவாதமாகியுள்ளது. கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் விலையுயர்ந்த பைக்குகளில் சாலையில் சாகசம் செய்வது, வேண்டும் என்றே அதிக வேகத்தில் சென்று சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்தார். …

Read More »

உரிமையியல் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு இன்று காலை தொடங்கியது: தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆய்வு

சென்னை: உரிமையியல் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு இன்று காலை தொடங்கியது. தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவிகள் அடங்கிய 245 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி தேர்வை நடத்தியது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நடந்தது. …

Read More »

திமுக இளைஞரணி மாநாட்டுக்கு 23 குழுக்கள்! வரவேற்பு டூ வழியனுப்பு வரை யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?

சென்னை: திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நிலையில் வரவேற்பு முதல் வழியனுப்பு வரை 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 23 குழுக்களிலும் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்பதை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு; வரவேற்பு குழு: திமுக இளைஞரணி மாநாடு வரவேற்பு குழு செயலாளராக ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் வீரபாண்டி பிரபு உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பந்தல் குழு: திமுக இளைஞரணி மாநில …

Read More »