Breaking News
Home / உடல் நலம் / தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் வைரல் காய்ச்சல்.. ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் வைரல் காய்ச்சல்.. ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றும், இன்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று முதல் அவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்த நிலையில் இன்று வைரல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டாக்டர் அவருக்கு முக்கிய அட்வைஸை கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதேவேளையில் சில நிகழ்ச்சிகளை அவர் திடீரென்று ரத்து செய்தார்.

அதேபோல் நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ (Health Walk) என்ற சுகாதாரத்துறையின் சிறப்பு திட்டம் இன்று சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தார். ஆனால் அவர் பங்கேற்றவில்லை. இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தான் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் (வைரஸ் காய்ச்சல்) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது நேற்றும், இன்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு இருமல், காய்ச்சல் ஆகியவற்றுக்கான அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரல் காய்ச்சல் பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோனு பதறும் காலம் மாறிவிட்டது- முதல்வர் ஸ்டாலின்

இதுதொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை பிரைவேட் லிமிடெட் மருத்துவமனை சார்பில் முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இந்த அறிக்கையானது சீப் சர்ஜன் மற்றும் இயக்குனர் மோகன் காமேஸ்வரன் பெயரில் வெளியாகி உள்ளது.

அதில், ”முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது. தற்போது அவர் வைரல் காய்ச்சலால்(Viral Flu) பாதிக்கப்பட்டுள்ளார். அவர் காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்து கொள்ளவும், சில நாட்கள் ஓய்வில் இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரல் காய்ச்சல் பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதால் இன்னும் சில நாட்கள் அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *