சென்னை: திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நிலையில் வரவேற்பு முதல் வழியனுப்பு வரை 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
23 குழுக்களிலும் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்பதை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;
வரவேற்பு குழு: திமுக இளைஞரணி மாநாடு வரவேற்பு குழு செயலாளராக ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் வீரபாண்டி பிரபு உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பந்தல் குழு: திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ரகுபதி என்ற இன்பா பந்தல் குழு செயலாளராக நியமனம்
பொது இருக்கை கண்காணிப்பு குழு: திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இளையராஜாவை இன்சார்ஜ் ஆக நியமித்த துரைமுருகன்.
வாகன கட்டுப்பாட்டுக் குழு: திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், மமக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதுவின் சகோதருமான அப்துல் மாலிக்கிடம் பொறுப்பு ஒப்படைப்பு.
நிதிக்குழு: திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஈரோடு பிரகாஷ் வசம் பொறுப்பு ஒப்படைப்பு.
பேச்சாளர் ஒருங்கிணைப்பு குழு: பிரபு என்பவர் திமுக இளைஞரணி மாநாடு பேச்சாளர் ஒருங்கிணைப்பு குழு செயலாளராக நியமனம்.
மேடை நிர்வாக குழு: வாளாடி கார்த்திக், ராஜா அன்பழகன் ஆகியோர் அடங்கிய டீம் வசம் பொறுப்பு ஒப்படைப்பு.
உணவுக்கூடம் மற்றும் கடைகள் கண்காணிப்பு குழு: திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பிரதிப் ராஜா இன்சார்ஜ் ஆக நியமனம்.
தீர்மானக் குழு: ஆனந்தகுமார் என்பவர் திமுக இளைஞரணி மாநாடு தீர்மானக் குழு செயலாளராக நியமனம்.
கழக முன்னணியினர் இருக்கை வசதி குழு: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கட்சியின் முன்னணியினரை அமர வைக்கும் குழுவின் செயலாளராக திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை நியமனம்.
இந்தியா கூட்டணி தொடர்பு குழு: இந்தியா கூட்டணி தொடர்பு குழு செயலாளராக விருதுநகர் எம்.பி. தனுஷ்குமார் நியமனம்
பொது பாதுகாப்புக் குழு: ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வசம் பொறுப்பு ஒப்படைப்பு
விளம்பரக் குழு: எபினேசர் எம்.எல்.ஏ. வசம் பொறுப்பு ஒப்படைப்பு.
பத்திரிகை ஊடக ஒருங்கிணைப்பு குழு: பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. இன்சார்ஜ் ஆக நியமனம்.
மருத்துவக் குழு: நெல்லை மேயர் சரவணனை செயலாளராக நியமித்த துரைமுருகன்.
இதேபோல் உபசரிப்பு குழு, சட்ட ஆலோசனை குழு, மலர் குழு, அலுவலக பொறுப்பு குழு, தூய்மை பணி குழு, சிசிடிவி கேமரா கண்காணிப்பு குழு என இன்னும் பல குழுக்கள் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.