சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2, இரு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இந்தியன் 3ம் பாகத்துக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ நேற்று மாலை வெளியிடப்பட்டது.
அதில் அனிருத்தின் பிஜிஎம் மிக மோசம் என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அனிருத்துக்கு இந்தியன் படத்தோட வேல்யூ தெரியுமா?
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இதே கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2017ல் தொடங்கப்பட்ட இந்தியன் 2 இந்தாண்டு தான் முடிவுக்கு வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் இருந்து முதல் அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்தியன் 2 இன்ட்ரோ நேற்று மாலை வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன்லால், ராஜமெளலி, கிச்சா சுதீப், அமீர்கான் ஆகியோர் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை வெளியிட்டனர். இந்தியன் தாத்தாவான சேனாபதி கேரக்டர் கம்பேக் கொடுக்கும் பாடலாக இது உருவாகியுள்ளது.
Come Back Indian என்ற கோரஸுடன் அனிருத் இசையில் அவரே பாடியுள்ள இந்தப் பாடல் தான், இந்தியன் 2 இன்ட்ரோவில் பிஜிஎம்-ஆக உருவாகியுள்ளது. ஆனால், இது இந்தியன் தாத்தா கேரக்டருக்கு செட்டாகவில்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அனிருத்தின் மியூசிக் சுத்தமாக எடுபடவில்லை எனவும், இந்தியன் 2 படத்தோட லெகஸியே மிஸ் ஆகிவிட்டதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்னும் சில நெட்டிசன்கள், “இந்தப் படத்தோட வேல்யூ தெரியுமா உனக்கு..?” என அனிருத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்தியன் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் போட்ட பிஜிஎம் எப்படி இருக்குன்னு கேட்டுப் பாரு என பங்கம் செய்து வருகின்றனர். விக்ரம், ஜெயிலர், லியோ படங்களில் அனிருத்தின் பிஜிஎம் வரவேற்பைப் பெற்றாலும், ஒரேமாதிரி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல், இந்தியன் படத்தில் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்திருந்த பிஜிஎம்களை, தற்போது வெளியான இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவில் எடிட் செய்து அனிருத்தை டேக் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியன் 2 இன்ட்ரோ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.