சென்னை எண்ணூர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான உரத்தொழிற்சாலை ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரவு 12.00 மணியளவில் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பெரிய குப்பம், சின்னக்குப்பம் பகுதிகளைச் சுற்றி ரசாயன வாடை அடித்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு இரவோடு இரவாக வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக நமக்குத் தகவல் வந்தது.கடலுக்கு செல்லும் தொழிற்சாலை பைப் உடனடியாக ஜூனியர் …
Read More »தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இபிஎஸ் திட்டவட்டம்
சென்னை: தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பேசியதாவது: முந்தைய செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் ஒருவிதமான பதற்றம் காணப்பட்டது. சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வென்றுவிட்டோம். …
Read More »வேங்கைவயல் சம்பவ குற்றவாளிகள் கைது செய்யப்படாதது அநீதி: ஓராண்டுகாலம் ஆனதையொட்டி கட்சி தலைவர்கள் கண்டனம்
சென்னை: வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இதையடுத்து, வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி …
Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 99-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது பிறந்தநாள் விழா கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக சார்பில் ஆர்.ராசா எம்.பி. உள்ளிட்டோர் நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக …
Read More »சபரிமலையில் தமிழக பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: சபரிமலையில் தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் கேரள முதல்வரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுக்காமல் கேரள …
Read More »ஜனவரி மாதத்தில் சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் – ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கப்படுவாரா? மாட்டாரா?
சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிகிறது. அடுத்த மாதம் உலக முதலீட்டாளர் மாநாடும் அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் வருவதால் அவை முடிந்த பிறகு பேரவைக் கூட்டம நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், முந்தைய கூட்டம் முடித்து வைக்கப்படாத நிலையில், இக்கூட்டத்தில் ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் மரபுகள் …
Read More »கோடை காலத்தில் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
சென்னை: கோடை கால விடுமுறையில் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக முக்கிய விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது. நெல்லை, பாண்டியன் உட்பட முக்கிய விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டில் இறுதி தேர்வுகள் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி, ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் முடியும். இதுபோல், கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிந்து பிறகு, கோடை விடுமுறை அறிவிக்கப்பட …
Read More »இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.22-ல் வெளியிடப்படும்
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் மழை வெள்ள பாதிப்புகளால் விண்ணப்ப பரிசீலனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பிஹார், உத்ராகண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், …
Read More »எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம்; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிசோதனையை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு …
Read More »பெயர்ப்பலகைகளில் தமிழ் | பெங்களூரு மாநகராட்சியைப் போன்று கடுமை தேவை – ராமதாஸ்
சென்னை: பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளுக்கும் இதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இதில், பெங்களூரு மாநகராட்சியைப் போன்று தமிழக அரசும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் & வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் …
Read More »