சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் மழை வெள்ள பாதிப்புகளால் விண்ணப்ப பரிசீலனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பிஹார், உத்ராகண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப், டெல்லி ஆகிய 12 மாநிலங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 5-ல் இருந்து ஜனவரி 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.