சென்னை: ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பேரவையில் முதல்வர் நேற்றுதனது பதிலுரையில் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. …
Read More »பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி முதலீட்டு மோசடி: இணைய வழி குற்றப்பிரிவு எச்சரிக்கை
சென்னை: மோசடி செய்பவர்கள், பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடும் நபர்களை குறிவைக்கின்றனர். மோசடி செய்பவர்கள் மோசடி வணிகத் திட்டங்கள், ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் அல்லது பொருட்கள் வர்த்தகத் திட்டங்கள் போன்ற போலி முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குகின்றனர். அவர்கள் அதி நவீன விளம்பரப்படுத்தும் யுக்திகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை முதலீடு செய்ய வைக்கின்றனர். ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானம் ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் அவர்கள் தங்கள் முழு முதலீட்டையும் …
Read More »தேர்தல் பத்திர முறை – அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள்
தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பது குறித்து விரிவாக காணலாம்…. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது. இந்த சட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த சட்டத்தின் …
Read More »சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ்நாடு முழுவதும் 29,009 பள்ளிகள்இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒவியம் உட்படகலை மற்றும் தொழிற் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு …
Read More »ஜெயலலிதா அறக்கட்டளை சட்டம் ரத்து உட்பட 4 சட்ட மசோதா நிறைவேற்றம்
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம், ஊராட்சிகள் சட்டத்தில், வீட்டுவரி என்பதற்குப் பதில்சொத்து வரி என குறிப்பிடுவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, வேதா நிலையத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, ஊராட்சி சட்டத்திருத்தம் தொடர்பான 2 மசோதாக்களை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். …
Read More »தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா: சட்டப் பேரவையில் அமைச்சர் பிடிஆர் தகவல்
சென்னை: தமிழகத்தின் அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்தும், மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான வசதிகள் குறித்தும் மேட்டுப்பாளையம் அதிமுக உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் …
Read More »கிராமப்புறங்களில் அரசு சார்பில் கடந்த 2001-க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள் சீரமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்த்து, சீரமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: …
Read More »தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்ப முடியுமா? – ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவு
சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்ப முடியுமா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் உடல்தகுதி குறித்த 30 …
Read More »ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “பெரியார், அண்ணாவின் வாரிசாக எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படி செயல்படுகிறேன்; கலைஞர் இருந்திருந்தால், திராவிட மாடல் ஆட்சியை கண்டு மகிழ்ந்திருப்பார்; பாசிசத்தை, எதேச்சதிகாரத்தை கண்டு பயந்து விடாமல் தொடர்ந்து முன்னேறுவோம் ஆட்சிப் பொறுப்பேற்ற 33 மாதங்கள், முன்னேற்றமான சாதனை மாதங்களாகும். திராவிட மாடல் …
Read More »“பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கவே செய்யாறு சிப்காட் விரிவாக்கம்” – அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்து வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நியாயமாக போராட்டம் நடத்திய 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை இந்த அரசு போட்டு அவர்களை கைது செய்தது கண்டிக் கத்தக்கது. விவசாயிகள் தங்களுடைய நிலங்களை காக்க, அறவழியில் போராட்டம் நடத்தினர். பொதுப்பணித் துறை …
Read More »