சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “பெரியார், அண்ணாவின் வாரிசாக எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படி செயல்படுகிறேன்; கலைஞர் இருந்திருந்தால், திராவிட மாடல் ஆட்சியை கண்டு மகிழ்ந்திருப்பார்; பாசிசத்தை, எதேச்சதிகாரத்தை கண்டு பயந்து விடாமல் தொடர்ந்து முன்னேறுவோம் ஆட்சிப் பொறுப்பேற்ற 33 மாதங்கள், முன்னேற்றமான சாதனை மாதங்களாகும்.
திராவிட மாடல் வழியில் இயங்குவதால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது; வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது கடந்த கால நிகழ்வாகி விட்டது; வடக்கிற்கும் நிதியை வாரி வழங்குகிறது.
அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது ஆளுநரின் கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல்” என்றார்.