Breaking News
Home / செய்திகள் (page 106)

செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்று இரவு, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பேருந்தை வழிமறித்து, பேருந்தில் ஏறியவர்களுக்கும் …

Read More »

மழை காலத்தையொட்டி பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை: விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்

சென்னை: மழைக் காலத்தையொட்டி விஜய்மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரைபைகள் வழங்கப்பட்டன. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறுநலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. மேலும், விழியகம்,குருதியகம், படிப்பகம் போன்றசேவைகளை விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். ஏழை குழந்தைகள் படிப்பதற்கு நிதி உதவிகளை அந்தந்த பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். அதேபோல், குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் படிப்பதற்கு முட்டை, பால் திட்டம் …

Read More »

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு எதிரொலி: 2 மசோதாக்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், அதில் 2 மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக். 31-ம் …

Read More »

பாஜகவை வீழ்த்த ஸ்டாலினின் ‘பக்கா’ ஸ்கெட்ச்! திமுகவின் BLA2 ப்ளான் பற்றித் தெரியுமா?

சென்னை: ‘தேர்தல் வரும் பின்னே; நாங்கள் களத்தில் நிற்போம் முன்னே” என்று முழு வீச்சில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 2 மாதங்கள் முன்னதாகவே களப்பணியைத் தொடங்கிவிட்டார். அதற்கு முன்னதாகவே அதற்கு முன்னதாக ஜூலை பெங்களூருவில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான 26 கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று புதிய பெயரைச் சூட்டி இருப்பதாக அறிவித்தனர். 6 மாதங்கள் முன்பே திமுக ரெடி! அதற்கு …

Read More »

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யாதோரும் கூட்டுறவுத்துறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்

சென்னை: கூட்டுறவுத்துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும், செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 32 தேர்வர்களுக்கு சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணியாணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டுறவுத்துறையில் ஏற்கெனவே 38 மாவட்டங்களில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 5,500 காலிப்பணியிடங்களை நிரப்ப 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேர்முகத் …

Read More »

ODI WC Final | IND vs AUS – பகை தீர்க்கும் படலம்: 20 ஆண்டுகால கணக்கை ஈடு செய்யுமா இந்தியா?

சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. உலகக் கோப்பை இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடுவது இது 2-வது முறை. இதற்கு முன்னர் கடந்த 2003 உலகக் கோப்பை இறுதியில் ஆஸி. வசம் இந்தியா தோல்வியை தழுவியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு தொடரின் இறுதிப் …

Read More »

நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது விநியோக குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்: சுகாதாரத் துறை

சென்னை: நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள பொது விநியோககுடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்புஅதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ் கொசுக்களின்உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், …

Read More »

ரயில் திட்டப் பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும்: ரயில்வே வாரிய உறுப்பினர் அறிவுறுத்தல்

சென்னை: ரயில் திட்டப் பணிகளை தாமதமின்றி விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென ரயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்திய ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெற்கு ரயில்வேயில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய நேற்று சென்னை வந்தார். சென்னை ஐசிஎஃப் ஆலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகளை அவர் …

Read More »

முதல்வர் காப்பீட்டு முகாம் டிச.2-க்கு தள்ளிவைப்பு

சென்னை: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழகம் முழுவதும் நாளை நடக்கவிருந்த சிறப்பு முகாம் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் …

Read More »

இதற்கு முன்பு நடந்த பேரவை சிறப்பு கூட்டங்கள் – ஓர் பார்வை!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு, நீட்தேர்வு, முல்லைப்பெரியாறு, மேகேதாட்டு விவகாரங்கள் தொடர்பாக சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக நாளை சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு நிகழ்வுகள், தேவைகளின் அடிப்படையில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், அவசர கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2011 டிசம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு …

Read More »