Breaking News
Home / செய்திகள் / முதல்வர் காப்பீட்டு முகாம் டிச.2-க்கு தள்ளிவைப்பு

முதல்வர் காப்பீட்டு முகாம் டிச.2-க்கு தள்ளிவைப்பு

சென்னை: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழகம் முழுவதும் நாளை நடக்கவிருந்த சிறப்பு முகாம் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். பலர் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையை வைத்துள்ளனர். அந்த அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை நடக்கவிருந்த சிறப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *