சென்னை: டிசம்பர் மாதம் கார்த்திகையும் மார்கழியும் இணைந்த மாதம். இறை வழிபாட்டிற்குரிய மாதம். பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசியும், சிவனுக்குரிய ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் மாதம் என்பதால் இது சைவ – வைணவ ஒற்றுமையை உணர்த்தும் மாதமாகவும் டிசம்பர் மாதம் விளங்குகிறது.
12 மாதங்களில் டிசம்பர் மாதம் கடைசி மாதம். மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலை என்பதால் இந்த மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து செய்யும் வழிபாடு பல மடங்கு அதிக பலனை கொடுக்கும்.பெருமாள் கோவில்களில் திருப்பாவையும், சிவன் கோவில்களில் திருவெம்பாவையும் பாடி இறைவனை பக்தியுடன் வழிபடுவார்கள். டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன. விரத நாட்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.
டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி
டிசம்பர் 03 ஞாயிறு – சஷ்டி விரதம்
டிசம்பர் 04 திங்கட்கிழமை கோரக்கர் சித்தர் ஜெயந்தி
டிசம்பர் 05 செவ்வாய்க்கிழமை – கால பைரவர் ஜெயந்தி
டிசம்பர் 08 வெள்ளி – ரமா ஏகாதசி
டிசம்பர் 10 ஞாயிறு – பிரதோஷம்
டிசம்பர் 12 செவ்வாய் – கார்த்திகை அமாவாசை, திருநெடுந்தாண்டகம், திருவிசை நல்லூர் கங்கா உற்சவம்
டிசம்பர் 16 சனி – திருவோணம், சதுர்த்தி
டிசம்பர் 18 திங்கள் – சுப்ரமண்ய சம்புக சஷ்டி,சிவலிங்க சஷ்டி
டிசம்பர் 23 சனிக்கிழமை – வைகுண்ட ஏகாதசி பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு
டிசம்பர் 24 ஞாயிறு மார்கழி கிருத்திகை, மிருத்யுஞ்ச பிரதோஷம்
டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமை மார்கழி பெளர்ணமி
டிசம்பர் 27 புதன்கிழமை ஆருத்ரா தரிசனம்
டிசம்பர் 30 சனி – சங்கடஹர சதுர்த்தி, திருமங்கை மன்னன் வேடுபறி, அகத்தியர் ஜெயந்தி
இந்த நாட்களை உங்கள் டைரியில் நோட் செய்து வைத்து கொண்டு அதற்கேற்ப விரதமிருந்து ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம்.