Breaking News
Home / செய்திகள் / ஃபுல் ஃபோர்ஸில் இறங்கிய சென்னை குடிநீர் வாரியம்.. கழிவுநீர் புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

ஃபுல் ஃபோர்ஸில் இறங்கிய சென்னை குடிநீர் வாரியம்.. கழிவுநீர் புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சென்னை: சென்னைப் பெருநகர பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி அதிகாரிகள் இரவோடு இரவாக சென்னை மாநகர் முழுவதும் களமிறங்கி, தண்ணீரை வடிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தினர். அதன் விளைவாக பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தபோதும், மழை விட்ட சில மணி நேரத்தில், சாலைகளில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது.

இந்நிலையில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கழிவுநீர் அகற்றும் பணியில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் ஆகியவை உள்ளன.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை 2,149 களப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு 044 – 45674567 ஆகிய தொலைபேசி எண்ணையும், 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *