Breaking News
Home / தகவல்கள் (page 9)

தகவல்கள்

மார்ச் 22-ல் தொடங்குகிறது ஐபிஎல் 2024 தொடர்: மே 26-ல் இறுதிப் போட்டி?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றுதான் தெரிகிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், ‘நாங்கள் ஐபிஎல் …

Read More »

கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு! சென்னையில் காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: அஸ்ஸாமில் படாதிரவாதான் கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், பா.ஜ.க.வின் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மதகலவரத்தால் எண்ணற்ற உயிர், உடமை இழப்புகளுக்கு ஆளான மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 6,000 கி.மீ. தூர இந்திய …

Read More »

டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் பணி தேர்வு: உடனடியாக கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புள்ளியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் …

Read More »

அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா | தமிழகத்தில் 90 லட்சம் அழைப்பிதழ், அட்சதை விநியோகம்: தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தகவல்

சென்னை: அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று (ஜன.22) நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் அரசியல்தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, …

Read More »

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: முதல்வருக்கு ஜாக்டோ – ஜியோ கடிதம்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ கடிதம் எழுதியுள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சார்பில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டிலும், அதன்பின் 2016-ல் அதிமுக ஆட்சி தொடர்ந்த போதும் அரசு …

Read More »

சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வை (மெயின் தேர்வு) கடந்தாண்டு நவம்பர் 4, 5ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் …

Read More »

பிரதமர் மோடி வருகையால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – கேலோ இந்தியா போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் இன்று மாலை கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி வரை நடைபெறுகின்றன. …

Read More »

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்: அமைச்சருக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் எழுதி யுள்ளனர். இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.வி.பத்மநாபன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: 6 கோரிக்கைகளுக்கு தீர்வு: போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஒப்பந்தம் கையெழுத்தானபோது, ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களவை தேர்தல் …

Read More »

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்தது

சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மழை பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளுக்கு பிறகு கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. …

Read More »

மருத்துவத்தை தாண்டி உலகில் வரம்பற்ற வாய்ப்புகள் உள்ளன; மருத்துவ படிப்பை 3-ம் ஆண்டில் தொடர மாணவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: மருத்துவக் கல்வியைத் தாண்டி உலகில் வரம்பற்ற வாய்ப்புகள் பல உள்ளன என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த கோவை மாணவர் மூன்றாமாண்டில் படிப்பைத் தொடர அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த மாணவரான மனோஜ் கடந்த 2020 செப்டம்பரில் நீட் தேர்வு எழுதினார். அந்த தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை …

Read More »