Breaking News
Home / செய்திகள் / மார்ச் 22-ல் தொடங்குகிறது ஐபிஎல் 2024 தொடர்: மே 26-ல் இறுதிப் போட்டி?

மார்ச் 22-ல் தொடங்குகிறது ஐபிஎல் 2024 தொடர்: மே 26-ல் இறுதிப் போட்டி?

மார்ச் 22-ல் தொடங்குகிறது ஐபிஎல் 2024 தொடர்: மே 26-ல் இறுதிப் போட்டி?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றுதான் தெரிகிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், ‘நாங்கள் ஐபிஎல் அட்டவணை பற்றி விவாதித்தோம். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவலுக்காகக் காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தல்கள் ஐபிஎல் நேரத்தில் வரக்கூடும்.

‘இந்திய மைதானங்களில்தான் நடைபெறும் இது பற்றி எந்த கேள்வியும் இல்லை. வேறு நாட்டுக்கு மாற்றுவது என்ற யோசனையும் இல்லை. வாக்குப்பதிவுத் தேதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஏனெனில் அதன் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து, அங்கிருந்து அதை முன்னெடுத்துச் செல்வோம். முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடனும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்துவோம்’ என்றார்.

அனைத்து வீரர்களும் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று பிசிசிஐ ஐபிஎல் அணி நிர்வாகங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் ஒரு சில ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டாடா குழுமம் ஐபிஎல் தலைமை ஸ்பான்சர்ஷிப் உரிமையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. பெண்கள் பிரீமியர் லீக்கின் தலைமை ஸ்பான்சர்ஷிப் உரிமைகளையும் டாடா குழுமமே வைத்துள்ளது.

மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டிகளுக்கான தேதி இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மகளிர் பிரிமியர் லீக் பிப்ரவரி 22 முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. மகளிர் பிரிமியர் லீக் தொடக்க போட்டிகள் மும்பையில் நடைபெற்றது. இப்போது பெங்களூரு, டெல்லியில் ஆடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மகுடம் சூடினர்.

ஐபிஎல் 2023 சீசனில் டாப் பேட்டர் ஷுப்மன் கில் 17 போட்டிகளில் 890 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக்காரர் ஆனார். அதே போல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக பர்ப்பிள் கேப் பெற்றார் பவுலரும் குஜராத் டைட்டன்சின் முகமது ஷமி. இவர் 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மோஹித் சர்மா 14 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் ரஷீத் கான் 17 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 2 மற்றும் 3ம் இடங்களை முறையே பிடித்தனர். 2023 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் ஆடிய தோனி 12 இன்னிங்ஸ்களில் வெறும் 104 ரன்களையே எடுத்தார். அதில் 32 நாட் அவுட் அதிகபட்ச ஸ்கோர். இந்த முறை ரசிகர்கள் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *