சென்னை: ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களை நியாய விலை கடை ஊழியர்கள் எவ்விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். மேலும், அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாலின், கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எப்போது வந்து கேட்டாலும் இன்முகத்துடன் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது; ”நியாயவிலைக் கடைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து …
Read More »சென்னை மாநகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்… !
மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் 1,933 காலிப்பணியிடங்கள் பிப்ரவரி 9 ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலிப்பணியிடங்கள் இருப்பதால் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.
Read More »ஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஏற்கெனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை சமீபத்தில், காணொலி வாயிலாக வழங்கியுள்ளது. தொடர்ந்து, தற்போது உதவிதேர்தல் …
Read More »புதிய மின் இணைப்புகளுக்காக 30 லட்சம் மீட்டர் வாங்க மின்வாரியம் டெண்டர்
சென்னை: புதிய மின் இணைப்புகளுக் காக 30 லட்சம் மின் மீட்டர்கள் வாங்க மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது. மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க காலதாமதம் ஏற்படுவது, மின்பயன்பாட்டைக் குறைத்து கணக்கெடுப்பது போன்ற முறைகேடுகளால் மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைசெயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்து, ஆளில்லாமல்தொலைத் தொடர்பு வசதியுடன்,தானாகவே கணக்கெடுக்கும்ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும் ரூ.3.03 கோடி இணைப்புகளில் ஸ்மார்ட் …
Read More »மார்ச் 2024-ல் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு : தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு
சென்னை : அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் …
Read More »ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: : தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்தவதற்குரிய அனைத்துவசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தளபேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. …
Read More »6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி வலைதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. இன்று (ஜன. 30, 2024) முதல் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் …
Read More »100 கிராமங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க ஆய்வு
சென்னை: தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அதிகளவு தயாரிக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும் சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 100 கிராமங்களில் சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒரு கிலோ வாட் சூரியசக்தி மின்நிலையத்தில் இருந்து 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி …
Read More »தமிழ்நாட்டில் எஸ்.பிக்கள் உட்பட 11 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை: திருவள்ளூர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 1. திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2. திருவள்ளூர் எஸ்.பி …
Read More »அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை சுற்றுப்பயணம்
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து, பல்வேறு தரவுகளை பெற்று ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. 05.02.2024 அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
Read More »