சென்னை : அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை 15.02.2024 தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும். அகில இந்திய துணைத் தொழிற் தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற tete//samraitimat மற்றும் https://ncvrnl.govh ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.